• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாட்சா படத்திற்கு பிறகு ஒரு செம மாஸ் படம் ஜெயிலர்..!

சினிமா

உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியான ஜெயிலர் படம் பாட்சா, படையப்பா, சந்திரமுகி போல ரசிகர்களை முழு திருப்தி படுத்திய படமாக அமைந்தது தான் அதற்கு காரணம்.
ரஜினிக்கு ஒரு மெகா ப்ளாக்பஸ்டர் கன்பார்ம்( 1000 கோடி வசூல் பண்ண கூடுமோ? என்ற கேள்வியை நிலை வைத்து விட்டது இந்த படம்)
73 வயதில் ஃபுல் எனர்ஜியுடன் தனக்கேற்ற போலீஸ் அதிகாரி பாத்திரம், டான் வேடம் தேர்ந்தெடுத்து வேடத்திற்கேற்ற கெத்தான உடைகளை அணிந்து நடிப்பில் மரண மாஸ் காட்டி இருக்கிறார். 
நம் கண்கள் திரையில் ரஜினியை விட்டு படம் முழுவதும் அகலவில்லை.

திரையில் துப்பாக்கி சத்தம் தியேட்டரில் விசில் சத்தம் என ஒரு அதகளம்.

டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் திகார் சிறையில் ஜெயிலராக வரும் பாத்திரம் வின்டேஜ் ரஜினியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.அழகோ அழகு..! 
இங்க நான் தாண்டா கிங் hukum என்ற பஞ்ச் வசனத்தை இனி எங்கும் கேட்கலாம்.

நெல்சன் மிக அருமையாக திரைக்கதை அமைத்து காட்சிகளை பிரமாண்டப்படுத்தி நிறைய திருப்பங்களை வைத்து நம்மை சீட்டு நுனிக்கே அடிக்கடி கொண்டு வந்து விடுகிறார். நெல்சன் சாருக்கு ரஜினி ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்.

பல ஸ்டார்கள் இருந்தாலும் யாரையும் வேஸ்ட் பண்ணல ரஜினி சார் மகனாக வரும் தரமணி அஸ்வின்ஸ் போன்ற படங்கள் நடித்த வசந்த ரவி தனது பாத்திரத்திற்கு ஏற்ப நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஜாக்கி ஷெரப், சிவா ராஜ்குமார், மோகன்லால், தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஆகியோர் சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் ஜெயிலர் ஒரு Pan India படமாக அனைத்து மாநிலங்களிலும் வசூலை வாரிக் குவிக்கும் என்பது உறுதி.
இப்படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் வில்லன் விநாயகம். இதுவரை நாம் காணாத வில்லத்தனமான நடிப்பால் நம்மை மிரள வைத்து விட்டார். 
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் அட்டகாசமான ஒளிப்பதிவு ரஜினியின் கண்கள் காட்டும் நடிப்பை கூட மிக துல்லியமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள்.
ஆங்கில படங்களை மிஞ்சும் வகையில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஜெயிலர் படம் கெவின் குமார் ( ஸ்டண்ட் சிவா மகன்) அமைத்த அற்புதமான சண்டை காட்சிகள் தான் காரணம்
அரபிக்குத்து மாதிரி இல்லாம காவாலா கரெக்டான இடத்தில் வச்சுருக்காங்க. டான்ஸ் அழகாக அமைத்தவர் மாஸ்டர் ஜானி.
ரஜினி திஹார் ஜெயில் போர்ஷன் நல்லா ஒர்க்அவுட் ஆகியுள்ளது. ஜெயிலர் பிளாஷ்பேக் சூப்பர்.
யோகி பாபு காமெடியில் கலக்கியுள்ளார். நெல்சனின் பிளாக் காமெடி அள்ளுகிறது.
(சீரியசான இடங்களில் வரும் சின்ன சின்ன காமெடிகளுக்கு பிளாக் காமெடி என்று பெயர்)அது இந்த படத்தில் நன்றாக அமைந்துவிட்டது. 
அனிருத் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிருக்கார்.பிஜிஎம் வேற லெவல்.
படம் முழுக்க ரஜினி ரகளையாய் இருக்கிறார்.குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். படம் சூப்பர்ஹிட் ஆவது உறுதி. விறுவிறுப்பான காட்சியமைப்பு பரபரப்பான திரைக்கதையுடன் வந்திருக்கும் அருமையான எண்டர்டெயினர்.
மொத்ததுல படம் சொல்லி அடிச்சுருக்கு. குடும்பத்தோட பாக்கலாம். வசூல் மழையில் நனையப்போகுது ஜெயிலர்.
ஈசன் து எழில்விழியன்

Leave a Reply