• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு நடவடிக்கை

இலங்கை

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும்; மருந்துகளில் 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் விஷமாவதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி உள்ளிட்ட 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக Prepofol தடுப்பூசி, Bupivacaine> Amexileve, Pedrizolone மற்றும் Cefrizone ஆகிய மருந்துகள் பயண்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மருந்துகளை கொள்வனவு செய்யும் அல்லது மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தேசிய ஒழுங்குமுறை ஆணையம் தலையிடாது எனவும், மருந்து தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால் குறித்த விடயத்தில் தாங்கள் தலையிடுவதாகவும் தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், மருந்துகளை இறக்குமதி செய்யும் அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்களால் மாத்திரமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று குறித்த அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது, உரிய வகையில் கேள்வி கோரல் இடம்பெற்று அரச கொள்முதல் விதிகளின்படி மருந்துகள் கொள்வனவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டிற்கு தேசிய ஒளடத அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை நிராகரிப்பதாகவும், அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply