• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றி பெற்றது மகாஜனா

இலங்கை

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் 17 வயது பிரிவினருக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டி  3.8.2023 அன்று யா/மகாஜனக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய ibbahamuwa model பாடசாலை  30 ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. 

பந்துவீச்சில் துல்லியமாக பந்து வீசிய யோவேல்ரொஷான் 7 அர்ஜிதன், துளசிகன், லகீசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பாடிய மகாஜனா 28 ஓவர் நிறைவில் 6 இலக்குகளை இழந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டது... துடுப்பாட்த்தில் K.அர்ஜிதன் 35 ஓட்டங்களையும் M.லகீசன் 18 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றார்கள். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும், பயிற்றுனர்,பொறுப்பாசிரியர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
 

Leave a Reply