• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துருக்கி செல்கிறார் புதின் - முக்கிய பிரச்சனை குறித்து பேசுகிறார் எர்டோகன்

ரஷிய அதிபர் புதின் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த மாதம் துருக்கி வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ''தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், வெளிநாட்டுத்துறை மந்திரி, புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர்கள் புதின் வருகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது, இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன்'' என்றார்.

கடந்த புதன்கிழமை இரு தலைவர்கள் போன் மூலம் பேசிக்கொண்டனர். அப்போது புதின், துருக்கி வருகையை எர்டோகன் ஏற்றுக்கொண்டார். புதின் வருகையின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா இன்னும் நீட்டிக்காமல் உள்ளது. இதை நீட்டித்தால் துருக்கி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியும். ஜூலை 2022-ம் ஆண்டு துருக்கி, ஐக்கிய நாடுகள், உக்ரைனுடன் தானிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 17-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின் ரஷியா ஒப்பந்தத்தை நீட்டிகக்வில்லை.

Leave a Reply