• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆடி அமாவாசை ஏற்பாடுகள்...

இலங்கை

கீரிமலை சிவபூமி மடத்தில் வரும் ஆடி அமாவாசை தினத்தில் அன்னதானம் வழங்கப்படும்.

வரும் 15.08.2023ம் திகதி ஆடி அமாவாசை தினத்தில் பல ஆயிரம் மக்கள் தமது முன்னோர்களுக்காக தர்பணம் கொடுப்பதற்கும் 

கீரிமலை புனித தீர்த்தத்தில் நீராடி ஆத்ம சாந்தி பிரார்த்தனை மேற்கொள்வதற்காகவும் வருகை தருவார்கள்.

இவ்வாறு வருகை தரும் மக்களின் நன்மை கருதி கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி மடத்தில் அன்னதானம் வழங்குவதற்குரிய சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகாலையில் வரும் மக்களின் நன்மை கருதி நேநீர் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் மக்களின் தேவையறிந்து சேவை வழங்க கீரிமலை சிவபூமி மடம் தயாராக உள்ளது.

அத்துடன் நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூரில் அமைந்துள்ள தெல்லிப்பளை துர்க்கா தேவி மணி மண்டபத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில் எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ 

அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்.

அன்னதானத்தை மஹாதானம் என்றும் அழைப்பதுண்டு. பெரும்பாலான மொழிகளில் இது அன்னதானம் என்றே அழைக்கப்படுகிறது. 

அன்னம் என்பது உணவை குறிக்கும் சொல் பூதானம், கோதானம், வித்யதானம் என இன்னும் பல வகையான தானங்கள் இருந்தாலும் அன்னதானத்தின் முக்கியத்துவத்தை ஒருவர் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

காரணம், இந்த தானத்தில் நீங்கள் ஒருவருக்கு தேவையான உயிர்ப்பான விஷயத்தை வழங்க முடியும். அதனால் தான் நம் முன்னோர்கள் பசியை பிணி என்று அழைத்தார்கள்

பசிப்பிணி போக்குதல் தலையாய கடமை என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு, ஒருவரின் வயிற்று பசியில் இருக்கிறது. எனவே அந்த அக்னியை உணவை கொண்டு அணைப்பதென்பது, யாக குண்டத்தில் ஆஹூதி இடும் புண்ணியத்திற்கு சமம்.

இத்தகைய புண்ணிய கடமையினை நன்கறிந்த காரணத்தால் கீரிமலை சிவ பூமி மடம் தானங்களில் உயர்ந்த தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிற்கின்றது.
 

Leave a Reply