• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜமுனாராணி பின்னணி பாடகி.....

சினிமா

பி.சுசீலாவிற்கு இசை உலகில் தோழி யார் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் .. அவரது சக  பாடகிகள் எல்லாரும் தோழிகள் தான்
இருந்தாலும் பி.சுசீலாவுக்கு நெருக்கமான ஒரு தோழி இருக்கிறார் என்றால் அது பின்னணி பாடகி "ஜமுனா ராணி " அவர்கள் தான்.
"மாமா மாமா மாமா",
"காளை வயசு கட்டான சைசு", 
"பாட்டொன்று கேட்டேன்",
"காவிரி தாயே காவிரி தாயே",
"செந்தமிழ் தேன் மொழியாள்"
"தாரா தாரா வந்தாரா:,
"பக்கத்திலே கன்னி பொண்ணிருக்கு",
"யாரடி நீ மோகினி", 
"குங்கும பூவே கொஞ்சு புறாவே",
"நெஞ்சில் குடியிருக்கும்",
"ஆதி மனிதன் காதலுக்கு பின்".
"சித்திரத்தில் பெண் எழுதி",
"காமுகர் நெஞ்சில் நீதியில்லை
 என  பல ஹிட்ஸ் நினைவில் வந்து போகிறதா?   ஜமுனாராணி வயதில் பி.சுசீலாவை விட சிறியவர் என்றாலும்
பி.சுசீலா  திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னாலேயே திரை உலகில் அறிமுகமானவர்.
ஐம்பதுகளில் நிறைய இசை அமைப்பாளர்கள் திரை உலகை ஆக்கிரமித்து இருந்தார்கள்.
அதைப்போல் நிறைய பாடகிகளும் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருந்ததால் வாய்ப்புகளும் நிறைய இருந்தது. அந்த  கால கட்டத்தில் ஜமுனாராணி நிறைய ஹிட்ஸ் கொடுத்தார்.
ஜமுனாராணி பி.சுசீலாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அடிக்கடி பி.சுசீலாவை சந்திப்பதுண்டு. அவர் பி.சுசீலா டிரஸ்டில் ஒரு டிரஸ்டீ எனபது  பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்ப்பில்லை.
பி.சுசீலாவுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி இருக்கிறார்.
 பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் முதன் முதலில் நினைவுக்கு வருவது
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடல் தான். அவ்வளவு பாப்புலர் அந்த பாடல் என்றால் மிகை இல்லை.
பலே பாண்டியா படத்தில் கவிஞர் கண்ணதாசனின் ஈடு செய்ய முடியாத வரிகளில்
"அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே" பாடலையும் TMS, PBS. பி.சுசீலா, ஜமுனாராணி இணைந்து அசத்தி இருப்பார்கள். காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஓன்று.
இரு கதாநாயகிகளும், ஒரு கதாநாயகனும் நடிக்கும் முக்கோண காதல் கதைகளில் மூவரின் நிலைமையையும் சொல்லும் சோக காதல் பாடல்கள் இடம் பெறுவதுண்டு.
அப்படி ஒரு காதல் பாடல் தான்
மன்னாதி மன்னன் படத்தில் பி.பி.எஸ், பி.சுசீலா, ஜமுனாராணி பாடிய
"நீயோ நானோ யார் நிலவே" என்ற பாடல். பத்மினிக்காக பி.சுசீலாவும், அஞ்சலி தேவிக்காக ஜமுனா ராணியும் பாடிய பாடல் அவ்வளவு அருமையாக இருக்கும். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்டு ரசியுங்கள்.
அதே போல் சித்ராங்கி படத்திலும்
"நெஞ்சினிலே நினைவு முகம்"  என்ற பாடலும் முக்கோண காதலை சொல்லும் அழகான பாடல்.
அன்பு எங்கே’ படத்தில்
‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது.
இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.
கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில்
டி எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “

மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும்கள்ளபார்ட் நடராஜனும்.
அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து
பூவில் வண்டு போதை கொண்டு
அதிசயத் திருடன் படத்தில்
யாரென இனிமேல் கேட்காதே
ஆசை படத்தில்
ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து
மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து
நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, டி .எம்.எஸ்-சுடன் இணைந்து
யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து
எனக்கு நீதான் மாப்பிள்ள
எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய
கண்ணாடி கிண்ணம் காண்பவர்
எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய
என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்துl
அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன்
அண்ணா அண்ணா சுகம்தானா
கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து
கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து
மணக்கும் ரோஜா மை லேடி
கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து
பார்க்க பார்க்க மயக்குதடி
 கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து
பறக்கும் பறவைகள் நீயே
கவிதா படத்தில் டி .எம்.எஸ்-சுடன் இணைந்து
கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
.கவிதா படத்தில் டி எம்.எஸ்-சுடன் இணைந்து
உள்ளே இருக்கும் பொன்னம்மா
கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்த
இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
 காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய
என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்
பாடகி கே. ஜமுனா ராணி , தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

 

வள்ளியம்மை வள்ளி

Leave a Reply