• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயசித்ரா

சினிமா

திரையுலகையை பொருத்தவரை ஒரு வழக்கம் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் பெரியவர்கள் ஆனதும் நாயகன் நாயகி ஆக பிரகாசிக்க மாட்டார்கள் அதில் சற்று விதிவிலக்கானவர்கள் கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் அந்த வரிசையில் அவர்களைப் போல் இல்லாவிட்டாலும் கூட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு வளர்ந்தவுடன் கதாநாயகியாகவும் ஜொலித்த ஒருவர் ஜெயசித்ரா
இவரது தாயாரும் ஒரு நடிகை தந்தை ஒரு மிருக வைத்தியர் 1960களில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில படங்கள் நடிக்கிறார்
 பிறகு கதாநாயகியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இவருடைய குறைந்த வயது தோற்றத்தினால் அது கைவிடப்படுகிறது 
பிறகு மீண்டும் கே எஸ் கோபாலகிருஷ்ணன் இவரை கதாநாயகியாக குறத்தி மகன் என்ற படத்தில் நடிக்க வைக்கிறார் அதில் சிறப்பான அறிமுகம் கிடைக்கிறது

 அந்த படத்தில் ஸ்ரீதர் என்ற மற்றொரு குழந்தை நட்சத்திரம் தான் கதாநாயகன் அதில் துணை பாத்திரம் ஆக வருவது குழந்தை நட்சத்திரமாக இருந்து திரைக்கு வந்த கமலஹாசன் 
ஆக கமலஹாசன் படத்தில் அவரை விட முக்கியமான ஒரு பாத்திரத்தில் இவர் நடித்திருப்பார் என்பது இவருக்கு பெருமை 
அதன் பிறகு பல்வேறு படங்கள் பெரும்பாலானவை கமலுடைய ஜோடியாக நடித்திருக்கிறார் சிவக்குமார் ,ஜெய்சங்கர் போன்றவரிடம் நாயகியாக நடித்த இவர் பாரதவிலாஸ் படத்தில் சிவாஜியின் மகளாக வருவார் கமல் சிவாஜி நடித்த சத்தியம் படத்திலும் இவர் இடம் பெற்றிருப்பார் 
சினிமா பைத்தியம் என்ற ஒரு படம் அதில் டைட்டில் ரோலான சினிமா பைத்தியமாக இவர் படம் முழுவதிலும் வருவார் 
மேலும் சொல்லத்தான் நினைக்கிறேன் அரங்கேற்றம் போன்ற பாலச்சந்தர் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருப்பார் 
வெள்ளிக்கிழமை விரதம் என்ற படத்தில் பாம்புடன் நடித்திருப்பார்
துடுக்கான பெண்ணாகவும் வாயாடி ஆகவும் பல படத்தில் நடித்த இவர் ஒரு 200 படங்களுக்கு பிறகு சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் பொழுதும் அதேபோன்ற வேடம் கிடைத்தது ஆச்சரியம்தான் 
மாமன் மகள் என்ற படத்தில் நடிகை மீனாவின் தாயாக வருவார் புரியாத புதிர் என்ற பாலச்சந்தர் படத்தில் இவர் நடிகை கீதா உடைய தாயாக வந்து அனைவரையும் மிரட்டும் கதாபாத்தில் நடித்திருப்பார்
மணிரத்தினம் படமான அக்னி நட்சத்திரத்திலும் விஜயகுமாரின் மனைவியாக வருவார் 
இவருடைய மகன் அமரேஷ் அவரை எப்பாடுபட்டாது  கதாநாயகன் ஆக்க வேண்டும் என்று இவரே படம் தயாரித்து இயக்கவும் செய்தார் ஆனால் அவருடைய ராசியோ என்னவோ அவர் இதுவரை நடித்த படங்கள் எதுவும் வெளிவராமல் முடங்கியது 
இவர் பிறகு தொலைக்காட்சி தொடர்கள் தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்தார் அலைகள், சிவரஞ்சனி ,ரங்கவிலாஸ் போன்றவை இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள் 
சிறிது காலம் காங்கிரஸிலும் இருந்தார் ராஜீவ் காந்தி இறந்த அந்த நிகழ்ச்சியில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரை சந்தித்து பேசி இருந்தார்
தான் பங்கேற்கும் திரைப்படம் ஆயினும் சரி தொலைக்காட்சி தொடரானாலும் சரி அரசியல் இயக்கமானாலும் சரி அதில் சிறந்து விளங்குவது இவரது வாடிக்கை 
மிகச் சமீபத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் செம்பியன் மாதேவியாக நடித்திருக்கிறார்

தொடரட்டும் இவரது கலைப்பயணம்.

Leave a Reply