• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

இலங்கை

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்களும்  இணைந்து இன்றைய தினம் சிறுவர் சந்தையொன்றை முன்னெடுத்து இருந்தனர்.

மயிலிணி முருகமூர்த்தி கோயில் முன்றலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த  இச்சந்தையைக் காண  வலிகாமம் வலயக் கல்வி அலுவ அலுவலர்கள், உட்பட பலரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது அதிகளவானவர்கள் சந்தையில் பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. குறித்த பாடசாலை தேசிய ரீதியில்  இடம்பெற்ற Mother Srilanka நிகழ்வில், முதலாம் இடத்தைப் பெற்று. வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த பாடசாலையுமாகும்.

இதுமட்டுமன்றி தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தை சிறப்பாக அமைத்து பலரின் பாராட்டையும் இப்பாடசாலை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply