• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பால் குடித்தவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

கனடா

கனடாவில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாலை குடித்த நபருக்கு 20000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கான வீடு ஒன்றை காண்பிப்பதற்காக சென்றிருந்த வேளையில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியின்றி கொள்கலனில் இருந்த பாலை இந்த முகவர் அருந்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மைக் ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீடு ஒன்றை சிலருக்கு காண்பிப்பதற்காக குறித்த வீட்டில் இருந்த போது, அந்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் அருந்த முயற்சித்துள்ளார்.

எனினும் அதில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் அதில் வைக்கப்பட்டிருந்த பாலில் கொஞ்சத்தை அருந்தி விட்டு மீண்டும் அதனை குளிர்சாதனப் பெட்டிக்குள்ளே போட்டு விட்டார்.

இந்த விடயத்தை வீட்டு உரிமையாளர்கள் சீ.சீ.ரீ.வி காணொளி மூலம் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

இது குறித்து ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த ரியல் எஸ்டேட் நிறுவனம் முகவருக்கு 20000 டொலர் அபராதம் விதித்துள்ளது. 

Leave a Reply