• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பலரும் அறிந்திராத யாழ்பாணம் மகேந்திரா திரை அரங்கம் .

சினிமா

மகேந்திரா என்ற பெயரில் திரையரங்கு யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளி செயின்ட். ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிரில் இருந்தது, அதை கல்லூரி நிர்வாகம் வாங்கி விடுதியாகவும் ஹென்றி பிரிட்டோ ஹாஸ்டல் என்ற பெயரில் இயங்கியது.  பின்னர் செயின்ட் , ஜோன்ஸ் அக்கடமியாவும் மாற்றியது.  மூன்று பாடசாலைகள் இந்த திரையரங்கு அருகே இருந்த படியால் பொது மக்களின்

எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து . திரையரங்கம் 1960 முற்பகுதியில் மூடப்பட்டது. சென் ஜோண்ஸ் கல்லூரி, சென் பற்றிக்ஸ் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி என்பனவாகும். மூடப்பட்ட அரங்கை

சென் ஜோண்ஸ் கல்லூரி விலைக்கு வாங்கி சென் ஜோண்ஸ் அக்கடமி என்ற பெயரில் பாடசாலை விட்டு

விலகிய மாணவர்களுக்கு க பொ த சாதாரண, உயர்தர பகல் வேளை வகுப்புகளை நடாத்தியது    தற்சமயம் பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மேலதிகமாக தொழில் நுட்ப வகுப்புகளும் சில அறைகள் பாடசாலை வகுப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
 

Leave a Reply