• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜூலை மாதத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

இலங்கை

ஜூலை மாதத்தில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 23 நாட்களில் 104,664 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இவர்களில் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 17,909 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் பிரித்தானியாவில் இருந்து 12,404 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 7,082 பேரும் வருகைதந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலிருந்து 5,812 பேரும், ரஷ்யாவிலிருந்து 5,419 பேரும், பிரான்சிலிருந்து 5,039 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்ததாகவும் இந்த வருடத்தில் இதுவரை 729,538 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply