• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண்டேலா,படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என தேசியவிருதைப் பெற்றார் மடோன் அஸ்வின்.

சினிமா

யோகிபாபுவிற்கு முதன்மை கதாபாத்திரத்தைக் கொடுத்து சமூக அக்கறையோடு கதையை சொல்லியிருப்பார்,மண்டேலா படத்தில்.
இப்படியான சிந்தனைமிக்க இயக்குனர்கள் பிரபல நடிகர்,நடிகைகளிடம் சிக்கி அவர்களுக்கான கதையை உருவாக்கும் போது தங்களது சுயத்தை இழந்து விடுகிறார்கள்.
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ரஜினியை வைத்து  ஜானி திரைப்படம் எடுத்து வெற்றியைப் பெற்றார்.ரஜினி படமாக இருந்தாலும் அதிலும் தனது முத்திரையை காண்பித்திருப்பார்.
பாலச்சந்தர் அவர்கள் ரஜினியை வைத்து முழுநீள நகைச்சுவை படமாக தில்லுமுல்லு படத்தை கொடுத்திருப்பார்.இத்தனைக்கும் அப்பொழுதே ரஜினி action hero-தான்.அவரையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக் கொண்டு வெற்றியடைந்தார்.
சந்திரமுகி திரைப்படம் கூட ரஜினி பாணி படமல்ல.

இயக்குனர் ஷங்கரும் கமல் அவர்களை வைத்து தனது ஸ்டைலை விட்டுக்கொடுக்காமல் இந்தியன் படத்தை கொடுத்து வெற்றியடைந்திருப்பார்.
சமீபத்தில் வந்த லோகேஷ் கனகராஜ் கூட கமல் அவர்களை தனது ஸ்டைலுக்கு கொண்டு வந்ததால்தான் வெற்றியடைந்தார்.
மணிரத்னம் அவர்கள்  ரஜினி,கமலை வைத்து படம் பண்ணினாலும் அதை தன்னுடைய படம் போல அடையாளப்படுத்திக் கொண்டார்.
மேலே சொன்ன இயக்குனர்களை மாதிரி மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற மாதிரி கதை பண்ணினாலும் இயக்குனருக்கான முத்திரையை பதித்திருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்.இது இயக்குனரின் படமாகயில்லாமல் நடிகரின் படமாக வந்துள்ளது.
மாவீரன் கதை-Spoiler alert:சத்யா (சிவகார்த்திகேயன்)ஒரு கார்ட்டூனிஸ்ட்.பயந்த சுபாவம் உள்ளவன்.தன் கண் எதிரிலே அநீதி நடந்தாலும் தட்டிக்கேட்க தைரியமில்லாத கோழை.விதவையான அம்மாவிடமும்(சரிதா),தங்கையிடமும் குடிசைப்பகுதியில் வாழ்கிறான்.
சத்யாவின் திறமையை இன்னொருவன் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுவதை அறிந்த தினத்தீ பத்திரிகையின் Sub-editer நிலா(அதிதி ஷங்கர்)அவனை தன்னுடைய பத்திரிகையிலேயே கார்ட்டூனிஸ்டாக பணியமர்த்துகிறார்.இதுவரையில் ஏமாற்றியவனை வேலையிலிருந்து நீக்குகிறாள்.
திடீரென சத்யா வாழும் குடிசைப்பகுதியை காலி செய்யச் சொல்கிறார் அமைச்சர் மிஷ்கின்.அங்கு வாழும் எல்லோருக்கும் குடிசைமாற்று வாரியம் போல் ஒரு பன்னடுக்கு வீட்டைக்கட்டி அங்கே குடியேற்றுகிறார் அமைச்சர்.
ஊழலில் விளைந்த கட்டிடம் என்பது முதல்நாளிலேயே தெரிந்து விடுகிறது.பலமில்லாத கட்டிடத்தைக் கண்டு கோபப்படுகிறாள் சத்யாவின் தாய்.எதிர்த்து கேள்வி கேட்க துப்பில்லாத மகனை வெறுத்து கண்டபடி திட்டுகிறாள்.மகன் வெறுத்துப் போய் தற்கொலை முடிவு எடுத்து,மொட்டை மாடிக்குச் சென்று குதிக்கும் வேளையில் அம்மாவிடமிருந்து போன் வர பின் மனம் மாறி திரும்புகையில் கால் தவறி கீழே விழுகிறான்.இதன் பிறகுதான் கதையின் முக்கிய திருப்பம் ஆரம்பம்.
அவனுடைய காதில் தொடர்ந்து அசீரிரி குரல் கேட்கிறது.அக்குரல் அவனுக்கு வீரத்தை விளைவிக்கிறது.அந்தக் குரல்படியே நடக்கிறான்.இதனுடைய விளைவுகள் என்ன என்பதுதான் கதையின் தொடர்ச்சி....அந்தக் குரலின் சொந்தக்காரர் நடிகர் விஜய்சேதுபதி.
இது ஒரு Fantasy subject என தெரிந்த பிறகு லாஜிக் எதுவும் பார்க்கத்தேவையில்லைதான்.உதாரணத்திற்கு பழைய படமான பட்டணத்தில் பூதம் படத்தை எடுத்துக் கொள்ளலாம்.அதெப்படி ஜாடியை தொறந்தா பூதம் வந்துருமான்னெல்லாம் நம் அறிவை தொறந்து கேள்வி கேட்கக்  கூடாது.ஆனால்,மாவீரன் படத்தைப் பொறுத்த வரையில் 
எடுத்துக் கொண்ட  கதையில் கூட சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததுதான் முக்கிய விஷயமா பார்க்க வேண்டியிருக்கு.படத்தின் முதல் பாதியில்  எவ்வித குறையுமில்லை.இரண்டாம் பாதியில்தான் சொதப்பிவிட்டார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு,புளியந்தோப்பில் அரசு சார்பில் அமைத்த பன்னடுக்கு குடியிருப்பு கட்டுமானம் மிக மோசமானதாக இருந்ததாக செய்திகள் வந்து அதிர்ச்சி ஆனோம்.பொது நல வழக்கெல்லாம்போட்டார்கள்.அதன் நிலை என்ன என்றுதான் இதுநாள் வரையில் தெரியவில்லை.
படத்தின் ஆரம்பக்காட்சியில் அச்சம்பவத்தின் பின்புலமாக இருந்ததால்,ஏதோவொரு நல்ல விஷயம் இருப்பதாகத்தான் எண்ணினேன்.ஆனால்,அதை நகைச்சுவைக்குள் திணித்து அந்த அவலத்தை மறக்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தின் + Points:சிவகார்த்திகேயனின் நடிப்பு,நீண்ட இடைவெளிக்குப்பிறகு Entry கொடுத்திருக்கும் சரிதாவின் நடிப்பு,யோகிபாபுவின் நகைச்சுவை.
இந்தப் படத்தில் அமைந்த ஒரு நகைச்சுவை காட்சியை காலத்துக்கும் மறக்க முடியாது.
யோகிபாபுவும் சில வட இந்தியத்தொழிலாளர்களும் கூலி வேலைக்காக நின்று கொண்டிருப்பார்கள்.வேன் ஒன்று சர்ரென வந்து நிற்கும்.வேனில் உள்ளவன்,'இங்கே யார் யாரு தமிழ் ஆளுங்க", ன்னு கேட்பான்.யோகிபாபு சந்தோஷத்தோடு கையை தூக்க,'இவனைத் தவிர எல்லாரும் வண்டியிலே ஏறுங்க",என்பான்.வட இந்தியர்கள் எல்லோரும் சந்தோஷத்தோடு  ஏறுவார்கள்.இவன் மட்டும் ஏமாற்றத்தோடு தனித்து நிற்பான்.
தமிழ்நாட்டில் நிலவும் அவலத்தை நகைச்சுவை வடிவில் அழகாக சொல்லியிருப்பார் இயக்குனர் மடோன் அஸ்வின்.
 நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தால் பழைய திறமையை மீண்டும் கொண்டுவரமுடியாது என்றுதான் சொல்வார்கள்.ஆனால்,சரிதாவின் நடிப்பில் பழைய Energy-யை அப்படியே காணமுடிகிறது.அதுவும் அநீதியைக் கண்டு கொதிக்கும்  கதாபாத்திரம் என்றால் சர்வசாதாரணமாக ஊதி தள்ளிவிடுவார்.
தண்ணீர் தண்ணீர்,அச்சமில்லை அச்சமில்லை ,மௌனகீதங்கள்-இவருடைய நடிப்பிற்காகவே பார்க்க வேண்டிய திரைப்படங்கள்.இவருடைய பெரிய குண்டு கண்கள்தான் இவருக்கான +++++.
------ Points:படத்தின் இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்ட திரைக்கதை,தொடர்ந்து வரும் அசீரிரியின் குரல் சலிப்பைத்தருவது,பத்திரிகையாளராக வரும் அதிதிக்கு முக்கிய பங்களிப்பு இல்லாமல் இருந்தது.கண் எதிரே அரசாங்கத்தால் ஒரு அநீதி நடக்கும் பொழுது பத்திரிகையாளரின்(அதிதி ஷங்கர்) பங்கை காட்சிகளில் சொல்லாமல் விட்டது கூட படத்தின் பலவீனத்திற்கான காரணமாக இருக்கலாம்.இயக்குனர் மிஷ்கின் அவர்களின் வில்லன் கதாபாத்திரம் எவ்வித தாக்கத்தையும் நமக்கு உண்டுபண்ணுவேயில்லை என்பதே உண்மை.
நம்ப முடியாத கதையைக் கூட நம்பும்படியாக செய்ய வைப்பதில்தான் கெட்டிக்காரத்தனமே இருக்கு.உதாரணத்திற்கு நான் ஈ படத்தை சொல்லலாம்.ஒரு சாதாரண ஈ பலமிக்க வில்லனை பழிவாங்கிய கதையை பார்த்து வியந்துதானே போனோம்.காரணம் நம்பும்படியான சுவாரஸ்யமான திரைக்கதை.
பலவீனமான கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றதே;இக்கட்டிடம் இடிந்தால் இம்மக்களின் நிலை என்னாவது என்கிற பதைபதைப்பை உண்டாக்கியிருக்க வேண்டும்.ஆனால்,அப்படி எந்தவொரு டென்ஷனையும் கடைசிவரையில் ஏற்படுத்தவேயில்லை.
ஆனால்,இத்திரைப்படம் வெகுஜன மக்களால் சுமாரான வெற்றியை பெற்று விடும்.
குறிப்பு:என்னுடைய விமர்சனக் காணொளிகளின் ஒலியளவு மிக குறைவாக உள்ளதாக நண்பர்களான தாங்கள் சொல்லி வந்தீர்கள்.அதை சரி செய்துள்ளேன்.அதனால்,இக்காணொளியைப் பார்த்து மேலும் குறையிருந்தால் சொல்லுங்கள்.திருத்துகிறேன்.மிக்க நன்றி.
மணிடாக்கீஸ் சானலை Subscribe செய்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.
ஆவணப்படங்களையும் விரைவில் இச்சேனல் வழியாகவே கொண்டு வருவேன்.

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி,வணக்கம்.
சேமணிசேகரன்
 

 

Leave a Reply