• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பூங்கோதை கலா ஸ்ரீரஞ்சன்

காலமானார்.

கச்சாய் கொடிகாமத்தை பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பூங்கோதை கலா ஸ்ரீரஞ்சன் அவர்கள், நேற்று திங்கட்கிழமை 08/12/2025, இங்கிலாந்தில் காலமானார்.அன்னார் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், கலை, இலக்கியம், நூல் வெளியீடு, தாயக மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கல் போன்ற பல்வேறு சமூகத் தொண்டுகளில் தன்னை தொடர்ந்து அர்ப்பணித்து வந்தவர். அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்குகள் பலவற்றையும் தன்னலமின்றி நடத்தி வந்தார் . அன்னாரின் மறைவு குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்கள் மற்றும் சமூகத்தாருக்கும் மிகுந்த இழப்பாகும். அவர்களின் துயரத்தில் "தமிழன் வழிகாட்டி " இணைந்து ஆற்றுப்படுத்தி, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
 

Leave a Reply