• Welcome to TamilsGuide
செய்திகள் 1

AI கணினிச் செயலாக்கத்திற்காக விண்வெளியில் புதிய புரட்சி - SpaceX நிறுவனத்தின் அதிரடித் திட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான கணினிச் செயலாக்கத் திறனின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களைக் கொண்ட புதிய செயற்கைக்கோள் கட்டமைப்பை விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்காவின் மத்திய தொலைத்தொடர்பு ஆணைக்குழு (FCC), ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் செய்தி சேவையின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்வைத்துள்ள இந்தத் திட்டத்திற்கு 'ஸ்டார்மைண்ட்' (Starmind) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளியில் தரவு மையங்களாகச் செயற்படக்கூடிய ஒரு மில்லியன் வரையிலான செயற்கைக்கோள்களைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பூமியில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான பெருமளவிலான தரவுகளை விண்வெளியிலேயே செயலாக்குவதுடன், அதிகரித்து வரும் கணினிச் செயலாக்கத் தேவைகளுக்குத் தீர்வளிப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பான அனுமதியைக் கோரி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முற்பகுதியில் விண்ணப்பித்திருந்தது.

இதன் மூலம், விண்வெளியில் தரவு செயலாக்க மையங்களை நிறுவும் எலான் மஸ்க்கின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றுமொரு முக்கிய கட்டம் எட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply