• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 119 பேர் கைது

கனடா

கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பெலிகன் நேரோஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 05 ஆம் திகதி வரையான ஐந்து வார காலப்பகுதியில், பெலிகன் நேரோஸ் பொலிஸார் மற்றும் சஸ்காட்சுவான் அமலாக்கப் பிரிவினரால் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 10 துப்பாக்கிகள், 1.1 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன், 302 கிராம் கொக்கெய்ன் மற்றும் 19 கிராம் ஏனைய தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது 83 பிடியாணைகள் மற்றும் 4 சோதனை ஆணைகள் நிறைவேற்றப்பட்டதுடன், 222 போக்குவரத்து சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 84 புதிய குற்றவியல் சட்டக் குற்றச்சாட்டுகளும், 5 போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரின்ஸ் ஆல்பர்ட் நகரிலிருந்து சுமார் 388 கிலோமீற்றர் வடகிழக்கே அமைந்துள்ள பெலிகன் நேரோஸ் பகுதியில், கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலை, செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வாகனத் துப்பாக்கிச் சூடு மற்றும் இம்மாத ஆரம்பத்தில் பதிவான சந்தேகத்திற்கிடமான மரணம் ஆகியவற்றைத் தொடர்ந்து அண்மைய மாதங்களாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, அப்பகுதியில் தொடரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் பெண்ணொருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply