உணவுக்குழாய் புற்றுநோயுடன் போராடிய நடிகர் - 75 வயதில் காலமானார்
சினிமா
அமெரிக்க நடிகர் ராண்டால் இங்கிலாந்து 75 வயதில் காலமானார்.
உணவுக்குழாய் புற்றுநோயுடன் போராடிய ஜெனரல் ஹாஸ்பிடல் புகழ் நடிகர் ராண்டால் இங்கிலாந்து, தனது 75 வயதில் காலமானார்.
1984 மற்றும் 1985-க்கு இடையில் நீண்ட காலம் ஒளிபரப்பான ஜெனரல் ஹாஸ்பிடல் தொடரில் நடித்து புகழ்பெற்றவர் ராண்டால் இங்கிலாந்து.
குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களிலும், All My Sons, The Glass Menagerie, Anton Chekhov ஆகிய நாடகங்களிலும் ராண்டால் இங்கிலாந்து நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் உணவுக்குழாய் புற்றுநோயுடன் போராடி வந்த ராண்டால் இங்கிலாந்து தனது 75 வயதில் காலமானார்.
கடந்த செப்டம்பர் 25-ஆம் திகதி அன்று, தமது குடும்பத்தினர் சூழ ராண்டால் காலமானது தெரிய வந்துள்ளது.
அவரது இரங்கல் செய்தியில், "ராண்டால் சுவாரஸ்யமான மனிதர்கள் மற்றும் கதைகள் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் ஏற்று நடித்த அனைத்து பாத்திரங்களிலும் ஒரு தந்தையாகவும், தன் பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் இருந்ததுதான் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.






















