வரலாற்றிலேயே மிக உயர்ந்த ஒரு நாள் வருவாயைப் பதிவு செய்த ஹட்டன் டிப்போ
இலங்கை
ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ, வரலாற்றிலேயே அதிகூடிய ஒரு நாள் வருவாயைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவிக்கையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஒரு நாள் அதிகூடிய வருவாய் பதிவாகியுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நேற்று(07.11.2026) காலை முதல் இன்று(08.11.2026) காலை 06:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப் பகுதிக்குள், இவ்வாறு 47 இலட்சத்து, 65ஆயிரம் ரூபா என்ற உயர்ந்த வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர வழித்தடங்களில் மொத்தம் 82 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதன் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.






















