மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்
இலங்கை
தற்சமயம் நாட்டில் சுகாதாரத் துறையில் கடும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளிகள் பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றன. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளைப் போலவே ஏனைய மருந்துகளுக்கும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. எனவே, இது தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தி, இந்த தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொளகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.





















