நவ.4ம் தேதி வெளியாகிறது இருவர் ஆல்பம்
சினிமா
அதிதி சங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்துள்ள புதிய இசை ஆல்பம் திட்டத்திற்கு ‘இருவர்’ (Iruvar) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இருவர் ஒரு பயணம் என்ற வாசகத்துடன் ஒரு அழகான காதல் இசைப் பயணமாக இது உருவாகியுள்ளது.இந்த ஆல்பத்தை 'ஜடா' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார்
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த பாடலை, அவரோடு இணைந்து சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி சங்கர் ஆகிய இருவர் பாடியுள்ளனர்.
இந்நிலையில் இருவர் பாடலின் ஆடியோ மற்றும் லிரிக் வீடியோ வரும் நவம்பர் 4 ,2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





















