• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி - நெதன்யாகு சினம்

சினிமா

2026 இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அந் நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  இந் நிலையில் இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், "அரபு அடிப்படையிலான கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றியை திருடிவிட்டன என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகூட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வெளியான தேர்தல் முடிவுகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று பெரும்பான்மையை இழந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சி 48 இடங்களையும், அரபு-வழிநடத்தப்படும் கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதற்கிடையே, தேர்தல் முறைகேடுகள் குறித்து காவல் துறை, ஷின் பெட் உளவு அமைப்பு மற்றும் மத்திய தேர்தல் ஆணையம் ஆகியவை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று லிகூட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த தேர்தல் முறைகேடுகளுக்குப் பின்னால் கத்தார் நாடு இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் குற்றம் சாட்டிய போதிலும், அக்கூற்றை கத்தார் உடனடியாக மறுத்துள்ளது.

அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் கோலான் போன்றோர் அரபு மக்களின் வாக்குகளை புறக்கணிக்கும் நெதன்யாகுவின் பிரிவினைவாத அரசியலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply