பிரபல சமையல் கலைஞர் பத்மஸ்ரீ செஃப் தாமு காலமானார்
சினிமா
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் சமையற்கலையை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு அவர்கள் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
செஃப் தாமு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார். இதனால், அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவின. இதையறிந்த செஃப் தாமு தான் உயிருடன் இருப்பதாகவும், கால் வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செஃப் தாமு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
செஃப் தாமு தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையற்கலையை உலக அரங்கில் உயர்த்தியதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார். ஒரே நாளில் 617 சமையல் குறிப்புகளைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த இவர், சமையற்கலையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற முதல் இந்தியச் செஃப் என்ற பெருமைக்குரியவர். மேலும், சமையற்கலைக்கு இவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. இத்தகைய பெருமைமிக்க கலைஞர் உயிரிழந்த செய்தி அவரது உறவினர் மறறும் நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





















