• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அக்குரேகொட இரட்டைக் கொலை - சந்தேகப் பேருந்தின் பயன்பாட்டுக்கு 14 நாட்கள் தடை

இலங்கை

தலங்கம – அக்குரேகொட பகுதியில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி அன்று சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பொலிஸ் விசாரணையாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர். 

மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த பேருந்து கைப்பற்றப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பேருந்து தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடத்திய விசேட விசாரணையில், இந்த பேருந்தானது போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட சட்டவிரோதப் பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த நேற்று (23) முதல் அமுலாகும் வகையில் 14 நாட்களுக்கு குறித்த பேருந்தின் பயன்பாட்டை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply