பிக்பாஸ் 10 இந்த வார எபிசோடில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறியது ஏன்?...
சினிமா
பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ளது. எனவே அடுத்தடுத்து மிகவும் கடுமையான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
5வது வார இறுதியில் சாந்தினி வெளியேற்றப்பட யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர் ராகவும் வெளியேற்றப்பட்டார். காரணம் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் 10 குழு அவரை வெளியேற்றினார்கள்.
எவிக்ஷன் விஷயத்தை தாண்டி சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் டிடிஎஃப் வாசன் டைமண்டை மறைத்து வைத்து விளையாடியது தான். இந்த வாரம் Survival Battle டாஸ்க் கொடுக்கப்பட்டு ப்ளூ டீம், ரெட் டீம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் வெளியேறிய பிறகு விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த 10வது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தொடங்கப்பட்ட நிலையில் அவர் தற்போது இந்த வாரம் நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லையாம். காரணம் என்னவென்றால், தொண்டை வலி காரணமாக அவர் இந்த வாரம் வரவில்லை என கூறப்படுகிறது.
அவருக்கு பதில் இந்த வாரம் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளாராம்.





















