• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவில் அடையாளம் தெரியாத வைரஸ் - 200 பேர் மருத்துவ கண்காணிப்பில்

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் செயல்பட்டு வரும் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மைய ஊழியர் ஒருவர், அடையாளம் காணப்படாத ஆபத்தான வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழப்பதற்கு முன்னர், உயிரியல் மாதிரிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் பணியாற்றியபோது டெஸ்ட் டியூப் ஒன்றை தவறுதலாக உடைத்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
 

Leave a Reply