எல்லை இல்லா வசூல் வேட்டையில் ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2...
சினிமா
ஹிப்ஹாப் ஆதியே கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் மீசைய முறுக்கு 2.
ஆதியுடன் கெடிகா சர்மா, சைத்ரா, நடனக் கலைஞர் பாபா பாஸ்கர், யோகி பாபு, ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை காண்கின்றனர்.
இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஹிப்ஹாப் ஆதி ஒரு பேட்டியில், மீசைய முறுக்கு 2 படத்திற்கு வரவேற்பு பயங்கரமாக உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தெரிவித்தார், சந்தோஷமாக உள்ளது, ரசிகர்களுக்கு நன்றி என கூறினார்.
நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் மீசைய முறுக்கு 2 திரைப்படம் மொத்தமாக இதுவரை ரூ. 48 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படம் கண்டிப்பாக செம வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.





















