ஊடகங்களுடன் முறுகல் - டிரம்ப் டிவி என்ற பெயரில் புதிய சேனல்
அமெரிக்க அதிபர் டிரம்ப், 'சி.என்.என்', 'எம்.எஸ்.நவ்' மற்றும் 'பொலிடிகோ' உள்ளிட்ட சில முக்கிய செய்தி ஊடகங்கள் வேண்டுமென்றே எதிர்மறையான மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, அந்த நிறுவனங்களின் நிருபர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கான அனுமதியை அவர் அதிரடியாக ரத்து செய்ததோடு டிரம்ப் டிவி' என்ற பெயரில் புதிய சேனல் ஒன்றும் தொடங்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
வெள்ளை மாளிகைக்கும் பாரம்பரிய ஊடகங்களுக்கும் மோதல்
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபரின் நிகழ்வுகளை ஒளிபரப்பும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தடைவிதிக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
மேலும், இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் முக்கிய அச்சு ஊடகங்களும், புகைப்பட இதழியல் நிறுவனங்களும் அதிபரின் நிகழ்வுகளை வெளியிடுவதை தற்காலிகமாக புறக்கணித்தன.
இதற்கிடையே, ஊடகங்களின் புறக்கணிப்பை சமாளிக்கும் வகையில் வெள்ளை மாளிகை தரப்பில் 'டிரம்ப் டிவி' என்ற பெயரில் புதிய சேனல் ஒன்று தொடங்கப்பட்டது.
இதன் மூலம் அதிபர் தொடர்பான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் நேரலைத் தகவல்கள் நேரடியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
வெள்ளை மாளிகைக்கும் பாரம்பரிய ஊடகங்களுக்கும் இடையேயான இந்த மோதல் அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





















