தனது நாட்டின் பெயரை மாற்றியதாக ஐ.நாவில் அறிவித்த நாடு
தனது நா்டடின் பெயரை மாற்றியதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடொன்றின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் மிகச்சிறிய தீவு நாடான 'நவ்ரூ' உலக வரைபடத்தில் இனி தனக்கான உண்மையான பழங்கால முகவரியை மீட்டெடுத்துள்ளதாக ஜனாதிபதி டேவிட் அடீங் பெருமையோடு அறிவித்தார்
இனி இந்த நாடு 'நவ்ரூ' அல்ல, அதன் தொன்மையான உச்சரிப்பான 'நாவோரோ' (Naoero) என்று அழைக்கப்படும். சர்வதேச அளவில் இதன் உச்சரிப்பு 'நவ்-ரூ' (Now-roo) என்பதற்குப் பதிலாக 'நவ்-எரோ' (Now-ero) எனக் குறிப்பிடப்படும் என அறிவித்தார்.
உலகத் தலைவர்கள் கூடியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் தனது நாட்டின் பெயரை சரியான முறையில் குறிப்பிடுமாறு அவர் கம்பீரமான குரலில் வலியுறுத்தியுள்ளார். "பல ஆண்டுகளாக உலகம் எங்களை 'நவ்ரூ' என்று அழைத்தது.
பிற நாட்டவருக்கு உச்சரிக்க எளிதாக இருந்ததால் அந்தப் பெயரையே உலகமும் தொடர்ந்து பயன்படுத்தியது. ஆனால், எங்கள் மக்கள் எங்களுக்குள் பயன்படுத்திய பெயர் அதுவல்ல," என்று ஜனாதிபதி அடீங் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
"ஒரு நாட்டின் வரலாற்றில், தங்கள் உண்மையான அடையாளம் என்ன என்பதை உலகிற்கு நினைவூட்ட வேண்டிய தருணம் வரும். எங்களுக்கு அந்தத் தருணம் இதுதான். எங்கள் முன்னோர்களின் நினைவுகளையும், மொழியையும், அடையாளத்தையும் சுமந்து நிற்கும் பெயரை மீண்டும் மீட்டெடுக்கிறோம்," என்றார் குறிப்பிட்டார்.
சுமார் 8 சதுர மைல் பரப்பளவும், 12,000 மக்கள்தொகையும் கொண்ட இந்தச் சிறிய நாடு, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் காலனித்துவ ஆட்சியில் இருந்து 1968-இல் சுதந்திரம் பெற்றது. அந்நாட்டின் சர்வதேசக் குறியீடு NRU என்பதிலிருந்து NRO என மாறுகிறது.
அந்நாட்டு மக்கள் 'நவ்ரூவியர்கள்' (Nauruan) என்பதற்குப் பதிலாக 'டெய்-நாவோரோ' (dei-Naoero) என்று அழைக்கப்படுவார்கள்.
ஒரு நாடு தனது தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தவோ அல்லது காலனித்துவச் சுவடுகளை அழிக்கவோ பெயரை மாற்றுவது இது முதல் முறையல்ல.
இலங்கை, ஈரான், மியன்மார், துருக்கி, எஸ்வாத்தினி, தாய்லாந்து மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகள் இது போன்று நாட்டின் பெயரை கடந்த காலங்களில் மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















