• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்

இலங்கை

“பாணந்துரை குடு சலிந்து” (Panadura Kudu Salindu) என்று அழைக்கப்படும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர் சலிந்து மல்ஷித குணரத்னவுக்காகப் பணத்தைச் திரட்டுபவராக செயற்பட்ட நபரொருவரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

கல்கிஸை பொலிஸார் நடத்திய சோதனையின்போது, இ​​ரத்மலானை விமான நிலையம் சந்திக்கு அருகில் ஹெரோயின் விநியோகித்துக் கொண்டிருந்த மற்றும் பணத்தை வசூலித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினரிடமிருந்து 63 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 15,055 மில்லி கிராம் ஹெரோயின், நவீன பணத்தை எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 26 மற்றும் 34 வயதுடைய அந்தத் தம்பதியினரிடம், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply