• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழகத்தில் இரண்டு நாளில் தெறிக்கும் வசூல் வேட்டையில் நடிகர் சூரியின் மண்டாடி...

சினிமா

வெற்றிமாறன் உதவி இயக்குனராக இருந்தவர் மதிமாறன் புகழேந்தி. இவர் முதன்முதலில் செல்ஃபி என்ற படத்தை இயக்கினார், ஆனால் அது சரியாக போகவில்லை.

இப்போது அடுத்ததாக நடிகர் சூரியை வைத்து மண்டாடி என்ற படத்தை இயக்கியுள்ளார். சூரியுடன் இதில் சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியாகி இருந்தது.

இதுவரை தமிழ் சினிமா அதிகம் காணாத பாய்மர படகு போட்டியை பற்றி இப்படம் பேசியுள்ளது.

படத்தை சூரி தாங்கியுள்ளார் என்றே கூறலாம், அவரின் அறிமுகம் முதல் இறுதி வரை தனது நடிப்பின் மூலம் படத்தை தாங்கியிருக்கிறார்.

படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துவரும் நிலையில் இப்படம் ரூ. 100 கோடி வசூலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 2 நாள் முடிவில் ரூ. 11.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply