• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா - அமெரிக்கா வர்த்தக பதட்டங்களுக்கு இடையில், டிரம்ப்- கார்னி நடுவே தொடரும் உரையாடல்

கனடா

வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில முக்கிய உத்தரவுகளைப் அறிவித்து இருந்தார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றமானது அதிகரித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வரி விதிப்புகளும் தீவிரமடைந்தன.

இந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்(Donald Trump) மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி( Mark Carney) இருவரும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கல்கரியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் கார்னி, பொருளாதார முரண்பாடுகளையும், சர்வதேச விவகாரங்களையும் பிரித்து பார்க்கும் திறன் கனடாவிடம் இருப்பதாக தெரிவித்தார்.

சர்வதேச விவகாரங்களில் கனடாவின் பங்கை நிறைவேற்றுவது தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்தும், முக்கிய புவிசார் அரசியல் குறித்தும் கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பலமுறை கலந்துரையாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் இது தங்களின் பொறுப்புகளில் ஒன்று என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply