• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவிற்கு வந்துள்ள  வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜனைக் கௌரவிக்க நண்பர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு 

கனடா

கடுமையான காலநிலை  அபாய எச்சரிக்கை இருந்தும் கனடாவிற்கு வந்துள்ள  'வீரகேசரி' நாளிதழின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜனைக் கௌரவிக்க நண்பர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு 

02-09-2026 அன்று நேற்று செவ்வாய்க்கிழமை ரொறன்ரோ பெரும்பாகத்தில் கடுமையான வான்நிலை மற்றும் அபாய எச்சரிக்கை இருந்தும் முன்னரே திட்டமிடப்படட வகையில் நடைபெற்ற ஒரு பாராட்டு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை 'வீரகேசரி' நாளிதழின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற அந்த வைபவம் எளிமையான முறையில் நடைபெற்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயற்குழு அங்கத்தவர் பாஸ்டர் சோதி அவர்கள் வைபவத்தை சிறப்பாக நடத்தினார். அங்கு வர்த்தகப் பிரமுகர்கள், சமூகஅமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என கலந்து கொண்ட அனைவரும் ஶ்ரீகஜன' அவர்களது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர்.

அவரது ஒவ்வொரு கனடா வருகையின் போதும் கனடாவிலுள்ள ஶ்ரீகஜன் அவர்களின் நண்பர்கள் அவரை வரவேற்று சந்திப்புக்களை நடத்துவது வழக்கமாக இடம்பெறும் மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
 

Leave a Reply