புத்தளத்தை வந்தடைந்துள்ள IVS TRADER கப்பல்
இலங்கை
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரியைக் கொண்டுவரும் ‘IVS TRADER’ கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனை நடவடிக்கைகளை விரைவில் முடித்து இன்று (04) பிற்பகல் நிலக்கரியை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனிடையே, மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க இன்று காலை நிலக்கரி நிலைமை குறித்துக் கண்டறிவதற்காக லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.





















