தொழிற்துறை எரிபொருட்களின் விலை குறைப்பு
இலங்கை
இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஃபர்னஸ் ஆயில் (furnace oil) மற்றும் நாப்தா (naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இலங்கைதேநீர்
திருத்தப்பட்ட விலைகள் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று CPC நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
இதன்படி, ஒரு லிட்டர் கனரக எரிபொருளான நாப்தாவின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 175 ரூபாவாகும்.
இதற்கிடையில், ஒரு லிட்டர் இலகுரக எரிபொருளான ஃபர்னேஸ் ஆயிலின் (furnace oil) விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 210 ரூபாவாகும்.






















