• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமோக வரவேற்பை பெற்றுள்ள மொத ராத்திரி திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் விவரம்.. 

சினிமா

சமீபத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றிருக்கும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டூரிஸ்ட் பேமிலி, சிறை, குட் நைட், டாடா என அறிமுக இயக்குநர்கள் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த 'மொத ராத்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

அமோக வரவேற்பை பெற்றுள்ள

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கிய இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் 'மொத ராத்திரி' திரைப்படம் இதுவரை 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த 13 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மொத ராத்திரி' திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.
 

Leave a Reply