தன்னை தானே கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன்..
சினிமா
இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த LIK படம் படுதோல்வி அடைந்தது.
நேற்று சென்னையில் டாக்சிக் படத்தின் விழா நடைபெற்றது. அதில் யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நல்ல வேளை நீங்க நடிக்கல..
கியாரா அத்வானி பற்றி பேசிய விக்னேஷ் சிவன், "எனக்கு நினைவிருக்கிறது. கபீர் சிங் படத்திற்கு முன் நான் உங்களை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அதை இப்போது படமாக்கி இருக்கிறேன். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி."
"நீங்க லக்கி, அதில் நீங்க நடிக்கவில்லை" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். தனது படத்தையே மேடையில் அவர் இப்படி கலாய்த்து இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.






















