உடல் எடையை குறைக்க நடிகை குஷ்பு பாலோ செய்த ஒரு Trick...
சினிமா
நடிகை குஷ்பு, 80களின் காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவருக்கு ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
குஷ்புவிற்கு கோவில், குஷ்பு இட்லி, குஷ்பு கொண்டை, குஷ்பு ஜாக்கெட் என பல விஷயங்கள் இவரது பெயரில் பிரபலமானது. தமிழை தாண்டி இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த குஷ்பு, தனது உடல் எடையை சுத்தமாக குறைத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நடிகை குஷ்பு ஒரு பேட்டியில் பேசும்போது, உடல் எடை அதிகரிப்பது தோற்றத்தை மட்டுமல்ல அன்றாட வேலைகளையும் பாதிக்கும்.
மாடிப்படி ஏறுவது, அதிக நேரம் நிற்பது அல்லது சாதாரணமாக நடப்பது கூட சிலருக்கு கஷ்டமாகிவிடும். இந்த அனுபவத்தை நானும் எதிர்க்கொண்டேன் என்றார். தனது உடல் எடையை குறைக்க நடிகை குஷ்பு ஒரு Trick பாலோ செய்தாராம், அது என்னவென்றால் ஜப்பானிய ஃபிட்னஸ் டெக்னிக்கை பின்பற்றினாராம்.
ஜப்பானியர்கள் தட்டிற்கு பதிலாக ஒரு கப் போன்றவற்றில் தான் உணவு சாப்பிடுவார்கள். பெரிய தட்டுக்கு பதில் சிறிய தட்டைப் பயன்படுத்தினால் குறைந்த அளவு உணவு கூட தட்டு நிரம்பியது போல தெரியும், இதனால் போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்ற உணர்வு மனதுக்குக் கிடைக்கும்.
இதையே பெரிய தட்டில் வைத்தால், உணவு குறைவாகத் தெரிந்து இன்னும் சாப்பிடத் தோன்றும். இந்த ட்ரிக்கைத்தான் குஷ்பு பின்பற்றி இருக்கிறார்.























