பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி
gautam rangarajan appointed as uk pm advisor: தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம்.
பிரித்தானிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அதன்படி, பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் ஆன்டி பர்னாம்.
கெளதம் ரங்கராஜன்
கெளதம் ரங்கராஜன், தமிழ்நாட்டின் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட முன்னாள் இந்திய தூதரக அதிகாரியான என்.எல் ரங்கராஜன் என்பவரின் மகன் ஆவார்.
1971 ஆம் ஆண்டில் பிறந்த ரங்கராஜன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1993 ஆம் ஆண்டில் பிபிசியில் பயிற்சித் தயாரிப்பாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், குழும வியூகம், செயல்திறன் இயக்குநர் என 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
மேலும், தொழில்முறை குழுப் பாடகராகவும் இசைத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
ரங்கராஜனின் பொறுப்புகளின் குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், பெருநிறுவன உத்தி மற்றும் உருமாற்றத்தில் அவருக்கிருக்கும் பின்னணியை இந்த நியமனம் பயன்படுத்திக்கொள்ளும் என்று பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.





















