• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் கனமழை; 6 பேர் பலி - வீடுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்

ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply