மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் காலநிலை மாற்றம்
இலங்கை
வறண்ட வானிலை காரணமாக இதுவரையில் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம்(NDRSC)அறிவித்துள்ளது.
நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மட்டைக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் உள்ள மக்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இவ்வாறு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.























