• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பஞ்ச இரதமேறி வீதியுலா வந்தான் மாவைக் கந்தன்

இலங்கை

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள்,  வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.

அத்துடன் பக்தர்கள் காவடிகள்,  அங்கம் பிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை எடுத்துவந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

Leave a Reply