ஈரானுடன் புதிய பேச்சு வார்த்தைக்கு செல்லும் டிரம்ப்
ஈரான் மீதான "மிகப்பெரிய" தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயார் போர்ஸ் வன் வானூர்தியில் பயணித்தபோது கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் உரையாடி வருகிறோம். அது நாளை பிற்பகல் தொடங்கும்" என டொனால்ட் ட்ரம்ப் கூறியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.






















