தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும், 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த வரபினையும் அடியொற்றியதாக இன்னும் மோசமாக விரிவுபடுத்தப்பட்டு தற்போதைய அரசாங்கம் மிகப் பாரதூரமான விளைவுகளை கொண்டு வருவதாகதான் இது சம்பந்தமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள், கருது தெரிவிக்கின்றார்கள். சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும்இ ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற சட்ட வரைவு தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள்இ அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்றவற்றிற்கு இவ்விடையம் தொடர்பில் விளக்களிக்கும் நிகழ்வு நேற்று விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியர் விடுதியில் நடைபெற்றது. இதன்போது வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இவ்விடயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். சமீபகாலமாக இதனை நாம் பார்க்கின்றபோது கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2018 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக பேசப்பட்டது. அப்போது அந்த அரசாங்கத்தால் இது சம்பந்தமான வரைபு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த வரைபிலே இருந்த சில விடயங்கள் அடிப்படை உரிமையிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மீது அரசியல் தலையீடுகளையும் கொண்டுவரும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதற்காக ஊடகவியலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை சார்ந்த நிறுவனங்கள், போன்ற அமைப்புகள் எல்லாம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்தான் அந்த வரைபு சட்டமாக்கப்படுகின்ற முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நிலைமை காரணமாக இச்சட்டத்தை முன்னெடுப்பதில் உரிய காலம் அவர்களுக்கு இல்லாததனால் அது கைவிடப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வந்ததன் பின்னர் 2022 ஆம் ஆண்டு இதே விடையத்தைக் கதைப்பதற்கான ஒரு சட்ட வரைவு உண்டு கொண்டுவரப்பட்டது. அதுவும் பொருளாதார பிரச்சினை கோவிட் பிரச்சனை, என்ற காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த வரவிலும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கொண்டு வருகின்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதுவும் சட்டமாக கொண்டு வரப்படவில்லை.
பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்தபோது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்இ அரச சார்பற்ற அமைப்புகளையும் ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்ற கோதாவில் மீண்டும் இந்த சட்டத்துக்குரிய செயற்பாட்டை ஆரம்பித்திருந்தார். அந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.
அந்த 2024 ஆம் ஆண்டு வரைவு சம்பந்தமாகவும் பலதரப்பட்ட குழுக்கள் மிகவும் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். .
அந்த வரைவு சமூகத்திற்கு முரணான சமூக செயற்பாடுகளை மழுங்கடிக்கின்ற மனித உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகளை கொண்ட அமைந்தது என எடுத்துரைக்கப்பட்டிருந்தன.
இப்போது மீண்டும் அதனை இந்த தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் மாதம் அதே சட்ட வரைவை வெளியில் கொண்டு வந்திருக்கின்றது அந்த வரைவானது 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும் 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த வரபினையும் அடியொட்டியதாக இன்னும் மோசமாக விரிவுபடுத்தப்பட்டு மிகப் பாரதூரமான விளைவுகளை கொண்டு வருவதாகதான் இது சம்பந்தமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள், கருத்து தெரிவிக்கின்றார்கள் என்னுடைய பார்வையும் அவ்வாறுதான் இது அமைந்திருக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
அதாவது அரசாங்கங்கள் மாறி இருக்கின்றதே தவிர அவர்களுடைய அணுகுமுறைகள் சம்பந்தமாக சிந்தனை மாற்றம் எந்த விதமான முரண்பட்டதாகவும் எவ்விதத்திலும் மேம்பட்டதாகவும் இருக்கவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






















