• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யா கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்

ஈரானில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.

கெஸ்பியன் கடல் பகுதியில் பயணித்த, ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களையே யுக்ரேனிய படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

ரஷ்யா - உக்ரைன் போர் நான்காண்டுகளைக் கடந்து தீவிரமாகத் தொடர்கிறது. உக்ரேனின் தலைநகர் கிவ்வில் ரஷ்யா வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உக்ரேனின் தற்காப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று அந்நாட்டுஅதிகாரிகளும் துறை சார்ந்த பிரதிநிதிகளும் உறுதிப்படுத்தினர்.

Leave a Reply