• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை

சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், சவூதி அரேபியா வழியாக இந்தியாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஏற்றி வந்த 2 வர்த்தகச் சரக்குக் கப்பல்கள் நடுவழியிலேயே திருப்பியனுப்பப்பட்டுள்ளன.

காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை இலக்கு வைக்கும் ஹவுதியினர், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாகச் செங்கடல் வழியாக வரும் கப்பல்கள், இந்த அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி (நன்னம்பிக்கை முனை வழியாக) மிக நீண்ட சுழற்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply