கனடாவில் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிய நபர் - பொலிஸ் நடவடிக்கையில் பலி
கனடா
கனடாவில், ஷாப்பிங் மாலுக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் 1.12 மணியளவில், கனடாவின் வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஒருவர் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த நபர் மாலிலிருந்து தப்பி, கார் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
அவரது கார் பல வாகனங்கள் மீது மோத, எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் காரை நிறுத்திய அவர், அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரில் ஏறியுள்ளார்.
பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு, கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.























