லெஹங்காவில் ஜொலித்த ஜான்வி கபூர்
சினிமா
பாலிவுட் திரை உலகில் இளம் நடிகைகளில் ரசிகர்களை நடிப்பில் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் தனது கவர்ச்சி கலந்த பேஷன் தோற்றத்தில் கவர்ந்து இழுத்து வருவதில் முன்னணியில் இருப்பவர் ஜான்வி கபூர்.
அவரது ஒவ்வொரு தோற்றமும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது. அந்த வகையில் ஜான்வி கபூர் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றார்.
விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றாலும் ஜான்வி கபூர் அணிந்து வந்து இருந்த ஆடை தோற்றம்தான் பிரமிக்க வைத்தது.
பாரம்பரிய இந்திய கைவினைத் திறன் மற்றும் நவீன கவர்ச்சியின் அற்புத கலவையாக மிகவும் நுணுக்கத்துடன் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட இந்த லெஹங்காவின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். விலை மதிப்புள்ள லெஹங்காவில் ஜான்வி கபூர் ஜொலித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
























