• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்

சினிமா

ஜுராசிக் பார்க் படத்தில் DR.ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சாம் நீல் (78) காலமானார்.

100க்கும் மேற்பட்ட படங்கள், தொடர்களில் நடித்திருந்த நீல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புற்றுநோயில் இருந்து முழுவதும் மீண்டிருந்தார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த சாம் நீல் எதிர்பாராத விதமாக, திடீரென அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

1980 மற்றும் 1990-களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சாம் நீல்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில், 1993-ல் வெளியான ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் முதல் பாகத்தில் டாக்டர் ஆலன் கிரான் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இப்படத்தின் மூலம், சாம் நீல் உலகளவில் கவனம் பெற்றார். இதைதொடர்ந்து வெளியான, ஜூராசிக் பார்க் III மற்றும் ஜூராசிக் வேர்ல்ட் டோமினிய படங்களிலும் நடித்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற சாம் நீல், உலகம் முழுவதிலும் ரசிகர்களை கொண்டிருந்தார்.

2023-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாம் நீல் கடந்த ஏப்ரல் மாதம் குணமடைந்துவிட்டதாக அறிவித்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

சாம் நீலின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றம் சக கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Leave a Reply