• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புலம்பெயர் தொழிலாளரை சுரண்டிய வழக்கில் இலங்கை பெண்ணுக்கு நியூஸிலாந்தில் தண்டனை

நியூசிலாந்து குடிவரவுத் துறையின் (INZ) வெற்றிகரமான விசாரணையைத் தொடர்ந்து, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பணியமர்த்தியபோது அவரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டொலர்களைக் கோரிய பால்மர்ஸ்டன் நோர்த் நிறுவன பணிப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ‘கலானி’ என்று அழைக்கப்படும் தொடம்வாலகே கலானி ஹெலிகுுமாரி ஜெயவர்தன (Dodamwalage Kalani Helikumari Jayawardhana) என்பவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (06) அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் 12 மாதங்கள் வீட்டுக் காவலில் (home detention) இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

பால்மர்ஸ்டன் நோர்த் (Palmerston North) நகரைச் சேர்ந்த ‘Computer Express 24 Care Limited’ என்ற நிறுவனத்தின் பணிப்பாளராக அவர் இருந்தபோது இந்தக் குற்றங்கள் நிகழ்ந்தன. 

மேலும், முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் பணியின் போது சட்டவிரோதமாகக் கோரப்பட்ட 15,000 நியூசிலாந்து டொலர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 59,657.68 நியூசிலாந்து டொலர்களை இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிறுவனத்தில் அலுவலக முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கை நாட்டவரான பாதிக்கப்பட்டவர், நியூசிலாந்தில் தனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், குடியிருப்பு விண்ணப்பத்தை முன்னெடுத்துச் செல்லவும் முயன்றபோது, ​​அவரிடம் மீண்டும் மீண்டும் பணம் கோரப்பட்டது.  இலங்கைசெய்தி

இந்தக் குற்றச்செயலில், அவர் சம்பாதித்த ஊதியத்தைத் திரும்பச் செலுத்துதல் மற்றும் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் மதிப்பிலான இதர கொடுப்பனவுகள் உட்பட, கணிசமான தொகைகள் செலுத்தப்பட்டிருந்தன.

நிதி ஆதாயத்திற்காக, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ஒரு புலம்பெயர் தொழிலாளியை வேலையளிப்பவர் சுரண்டியதற்கான ஒரு தீவிரமான உதாரணமாக இந்த வழக்கு அமைந்துள்ளது என்று நியூஸிலாந்தின் தேசிய விசாரணை முகாமையாளர் ஜேசன் பெர்ரி கூறினார்.

Leave a Reply