• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டினருக்கு அரசு வீட்டுவசதி வழங்குவதற்கு முழுமையாக தடை

இலங்கை

பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் அரசு வழங்கும் மானிய வீட்டுவசதித் திட்டங்களில் தங்குவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும் என ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) அறிவித்துள்ளார்.

இக்கொள்கையின்படி, தற்போது அரசு வீடுகளில் வசிக்கும் வெளிநாட்டினர் 3 மாதங்களுக்குள் தனியார் வாடகை வீடுகளுக்கு மாற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஒருவர் எவ்வளவு காலம் வசித்து வருகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்தத் தடை கடந்த காலங்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என ரிஃபார்ம் யுகே கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

நைஜல் ஃபரேஜின் இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பிற்குப் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பலத்த கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வீட்டுவசதிப் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், நைஜல் ஃபரேஜின் இந்த வலதுசாரி குடியேற்ற எதிர்ப்புப் பிரகடனம் அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply