• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலை

பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 20 பாகை செல்சியஸ் முதல் 29 பாகை செல்சியல் வரையிலும், வரவிருக்கும் வாரத்தில் 30 செல்ஸியஸ் க்கும் அதிகமாகவும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை தென்கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 33 செல்ஸியஸை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக வெப்பமான ‘மே மாத நாளாக’ இந்நாள் புதிய சாதனை படைக்கக்கூடும்.

இதேவேளை, பிரித்தானியாவில் இன்றும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply